Odam.in

ஓடம்.in – Tamil Infotainment

Hit enter after type your search item
Odam.in

ஓடம்.in – Tamil Infotainment

மலச்சிக்கலா ? அலட்சியம் வேண்டாம் – எளிய இயற்கை நிவாரணம்

img

இன்று பெரும்பாலும் 40% மக்கள் மலசிக்கல் மற்றும் அதன் இணை நோய்களால் அவதிப்படுகின்றனர். மலச்சிக்கலை அலட்சியமாக விட்டுவிட்டால் மூலம், பௌத்திரம் போன்ற தீவிர நோய்களுக்கு வழி வகுக்கும். ஆங்கில மருத்துவத்தில் இவற்றை குணப்படுத்த அறுவை சிகிச்சை மட்டுமே ஓரே தீர்வு.

மலச்சிக்கல் என்பது நமது உடல் நமக்கு அளிக்கும் சமிஞை, செரிமான மண்டலம் அல்லது உணவு முறைகளில் ஏதோ பிரச்சனை அதை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால் இதிலிருந்து எளிதில் விடுபடலாம்.

மலச்சிக்கல் – மலச்சிக்கல் என்பது நமது மலக்குடலில் உள்ள மலமானது வெளியேற்றுவதற்கு இலகுவாக இல்லாமல் கடினமாக இருக்கும், இதனால் மலத்துவாரத்தில் வலி, இரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

மலச்சிக்கலுக்கு பொதுவான காரணமாக இருப்பது நமது உணவு கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளில் உள்ள சீரற்ற தன்மையே . நமது சூழல் மற்றும் உடலுக்கேற்ற உணவு மற்றும் வாழ்கை முறைகளை மேற்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை எளிதில் வென்று விடலாம்.

தினந்தோறும் இருவேளை மலம் வெளியேற வேண்டும் , அல்லது ஒருவேளை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும். மலம் எவ்வித தொந்தரவும் இல்லாமல் எளிதாக வெளியேறினால் நீங்கள் ஆரோக்யமாகத்தான் இருக்கீறிர்கள். உங்களை மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.

ஒவொருவரின் உடலும் தனித்தமை வாய்ந்தது, அவற்றின் தேவைகளை அறிந்து செயல்பட்டால் போதும். பொதுவான காரணங்கள் மற்றும் எளிய வழிமுறைகள் சில கொடுக்கப்படுகின்றன, இவற்றில் எது உங்களுக்கு பொருந்துகிறதோ அதனை பின்பற்றுங்கள்.

நார்ச்சத்து மிகுந்த உணவுகள்

நம் உணவை செரிப்பதில் குடல் நுண்ணுயிரிகளின்(microbiome) பங்கு முக்கியமானது. உணவில் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் – பருப்புகள், பச்சை காய்கறிகள், பழங்கள், பால் போன்றவை சேர்ப்பதன் மூலம் குடல் நுண்ணுயிரிகளால் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்யலாம். தினம் ஒரு வாழைப்பழம் எடுத்துக்கொள்வது நல்ல பலனை தரும்.

சரியான அளவு நார்ச்சத்து மற்றும் தண்ணீரை எடுத்து கொள்வதன் மூலம், உணவு நன்கு செரிக்கப்பட்டு இலகுவாக வெளியேறும்.

நுண்ணுயிர் ஊக்கி (probiotic) மூலம் குடல் நுண்ணுயிரிகளின் எண்ணிகையை சமன் செய்யலாம் . தயிர்,ஊறுகாய் போன்ற நொதிக்கப்பட்ட உணவுகள் செரிமான பாக்டீரியாக்களின் எண்ணிகையை மேம்படுத்தும்.

மன அழுத்தம்

மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சனைகளும் மலச்சிக்கலுக்கு காரணமாக அமையும். மன அழுத்தத்திலிருந்து விடுபட தேவையான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

யோகா, நடை பயிற்சி போன்றவை நல்ல பலனை தரும். நீங்கள் வேறு நோய்களுக்காக மருந்து எடுத்துக்கொள்பவராக இருந்தால் அதுவும் மலச்சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம். உங்கள் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனையை கேட்டு பெறலாம்.

மலம் கழிக்கும் முறை

இந்தியபாணி கழிப்பறை (indian toilet) முறையே மலம் வெளியேற்ற சிறந்த முறை. மேற்கத்தியபாணி கழிப்பறை (western toilet) பயன்படுத்துவதன் மூலம் மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படலாம் எனவே மேற்கத்தியபாணி கழிப்பறையை சில மாற்றங்கள் செய்து அதனை நமக்கு ஏற்றவாறு பயன்படுத்தி கொள்வதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

மேற்கண்ட வழிமுறைகளை தொடர்ந்து மேற்கொண்டால் நல்ல பலனை பெறலாம். மலச்சிக்கலை அலட்சியம் செய்யாதீர்கள், அது உங்கள் உடலில் தீவிர விளைவுகளை ஏற்படுத்த கூடியது.

இறுதியாக உங்களது உணவு முறைகளை உங்கள் உடலுக்கு ஏற்ப மாற்றுவதன் மூலமும், தேவையான உடற்பயிற்ச்சி மூலமும் நல்ல மாற்றங்களை உங்கள் வாழ்வில் பெறலாம்.

This div height required for enabling the sticky sidebar