Odam.in

ஓடம்.in – Tamil Infotainment

Hit enter after type your search item
Odam.in

ஓடம்.in – Tamil Infotainment

கோடிகணக்கான நுண்ணுயிரிகள் (Microbiome) வாழும் மனித உடல்! – சுவாரஸ்ய தவல்கள்

img

நமது உடலானது சிக்கலான செரிமான அமைப்பை உடையது. நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் எவ்வாறு உடலின் உள்ள ஒவ்வொரு அமைப்பு மற்றும் உறுப்புக்கும் தேவையான ஊட்டமாக மாறுகிறது என்பதில் இந்த கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளின் (microbiome) பங்கு மிக முக்கியமானது. நம் வாழ்கை முழுவதும் நாம் இவைகளை நம்பியே வாழ்கிகிறோம்.

பாக்டீரியா என்றாலே, அவை நமக்கு தீங்கு செய்பவை என்ற கண்ணோட்டத்திலே இருக்கிறோம் ஆனால் இவை இல்லையென்றால் நாம் உண்ணும் உணவின் சுவையை கூட நம்மால் அறிந்துகொள்ள இயலாது, ஆம் நம் உமிழ்நீரில் உள்ள நுண்ணுயிரியால்தான் நம்மால் சுவையை பிரித்தறிய முடிகிறது. அதேபோல் குடலில் உள்ள நுண்ணுயிரிகளால்தான் நாம் உண்ணும் உணவு செரிக்கப்படுகிறது.

இந்த நுண்ணுயிரிகள் எங்கு இருந்து வந்தன?, அவை மனித உடலில் என்ன செய்கின்றன? இவற்றின் தாக்கம் மனித செயல்படு திறனை பாதிக்குமா ?, போன்ற தவல்கள் மிகுந்த சுவாரசியம் மிக்கவை !

எங்கிருந்து வந்தவை ? – நாம் நமது தாயின் கருவில் இருக்கும்போதே நுண்ணுயிரிகள் வளர்ச்சியடைய தொடங்கிவிட்டன – பிறக்கும் போது தாயிடமிருந்தும் பின் நமது சுற்றுப்புறத்திலிருந்தும் நம்மை வந்தடைகின்றன. நாம் உண்ணும் உணவு ,வாழ்வியல் முறைக்கேற்ப ஒவொரு மனிதனுக்கும் இந்த நுண்ணுயிரிகள் 80% முதல் 90% மாறுபடுகின்றன.

ஏன் முக்கியம் ? நாம் உண்ணும் உணவை செரிக்க வைத்து, அதன் சத்துகளை உடல் ஏற்றுக்கொள்ளும் மூலக்கூறுகளாக (புரதம், கொழுப்பு,…) மாற்றுவது இவற்றின் முக்கிய செயல். இந்த நுண்ணுயிரிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. நாம் உண்ணும் உணவின் தன்மைக்கேற்ப அவற்றின் எணிக்கை மற்றும் வகைகள் மாறுபடும் .இந்த நுண்ணுயிரிகள் இல்லையெனில் நம் உடலுக்கான சத்துகளை நம்மால் உணவிலிருந்து பெறவே இயலாது !.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியிலும் இவை முக்கிய பங்காற்றுகின்றன. மனித உளவியல் மாற்றங்களுக்கும் இவை காரணமாக இருக்கலாம் என தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக “டாக்சோபிளாஸ்மா கோண்டி (Toxoplasma gondii) ” என்ற ஒட்டுண்ணியானது எலிகளுக்கு பூனையின் மேல் உள்ள பயத்தை நீக்கி எலிகளை பூனையின் எளிதான உணவாக்குகிறது. எலியின் மூளை செயல்பாடுகளில் நிரந்தர மாற்றத்தை உண்டாக்குகிறது . நாம் உண்ணும் உணவானது நமது நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. உணவு ஒவ்வாமை மற்றும் செரிமான கோளாறுகளுக்கும் இவற்றின் சமன் இல்லாத தன்மையே காரணம்.

எவ்வாறு குடல் நுண்ணுயிரிகள் தரத்தை மேம்படுத்துவது ?. நார்சத்து அதிகமுள்ள உணவு, நொதிக்கப்பட்ட உணவு போன்றவை நல்ல நுண்ணுயிரிகள் எண்ணிக்கையை பாதுகாக்கும். குடல் நுண்ணுயிரிகளின் சமநிலை நம் உடலின் சமநிலைக்கும் முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உணவு சமைக்கப்படும் முறையும் முக்கியமானது. பச்சை காய்கறிகள், பாதி சமைக்கப்பட்ட காய்கள் போன்றவைக்கு பொறிக்கப்பட்ட உணவை விட சிறந்தது. தயிர், ஊறுகாய் ,பூண்டு, வெங்காயம்,வாழைப்பழம் , பருப்புகள், விதைகள் போன்றவை குடலில் வாழும் நல்ல நுண்ணுயிரிகள் தரத்தை மேம்படுகின்றன.

நமது உடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகள்( good-bacteria )எண்ணிக்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது நாம் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் ( antibiotic medicine). இவற்றிக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிக்கும் , தீமை செய்யும் நுண்ணுயிரிக்கும் வித்தியாசம் தெரியாது, இந்த மருந்துகள் அனைத்து பாக்டீரியாக்களையும் அழித்து விடும். உடல் எடை அதிகரிப்பதிலும் நுண்ணுயிரிகளின் சமநிலைக்கும் தொடர்பு உண்டு.

நமது உடலின் தன்மையை தெரிந்து கொள்வதன் மூலம் சுகமான, வளமான வாழ்வை வாழ முடியும். உடல்தான் நாம் செயலாற்ற உதவும் கருவி.மனிதன் உடல் இயங்க எத்தனை கோடி உயிர்கள் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டியுள்ளது என்பதை நினைத்தால் ஆச்சர்யமாகதான் உள்ளது.

This div height required for enabling the sticky sidebar